நல்ல நட்பு

நல்ல நட்பு, இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக்.160, விலை 145ரூ. ஒவ்வொரு வாழ்விலும் தனிமை என்பது தவிர்க்க முடியாதது என்றே பலரும் எண்ணுகின்றனர். தனிமை, மனிதனின் இயல்பு நிலையைச் சிதைக்கிறது; மகிழ்ச்சியை வற்றி போகச் செய்கிறது. இத்தகைய கொடிய நிலையை இல்லாமல் செய்யும் வரம் தான் நம் நண்பர்கள். நட்புறவு என்பது சொர்க்கச் சுகத்தை முன்னதாகவே சுவைக்க உதவும் தருணங்களின் உருவாக்கம். ஒழுங்கை கடைபிடித்து வாழ்வது எத்துணை இன்றியமையாதது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 12/11/2017.

Read more

அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம்

அறிவுலகின் ஆசான் அப்துல்கலாம், இரா. குழந்தை அருள், சங்கர் பதிப்பகம், பக். 168, விலை145ரூ. பெரியோர் பலர் வாழ்வியல் நெறியைக் கற்பித்துள்ளனர் என்றாலும், மாமேதை அப்துல் கலாமின் அணுகுமுறை வித்தியாசமானது. இந்நுாலை வாசிக்கும் ஒவ்வொருவரும், அறிவியலில் சாதனை படைத்த விஞ்ஞானி, கலாம் வாழ்ந்த காலகட்டத்தில் வாழ்ந்தோம் என்று பெருமிதம் கொள்ளக்கூடியவர்களாகவே இருப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 5/11/2017.

Read more