திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள்

திருநெல்வேலி-நீர்-நிலம்-மனிதர்கள், இரா.நாறும்பூநாதன், சந்தியா பதிப்பகம், பக். 270, விலை ரூ.270. ஒருங்கிணைந்த திருநெல்வேலி மண்ணின் சிறப்புகள் பற்றிய 41 கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முதல் குற்றால குறவஞ்சி வரை தெரிந்த விஷயங்கள் பற்றிய தெரியாத விவரங்களை சுவாரசியமாகத் தந்திருப்பது சிறப்பு. தஞ்சையில் பிறந்து திருநெல்வேலிக்கு வந்து ஏழை, எளிய மக்களுக்கு கல்விக் கொடையளித்த கிளாரிந்தா, ஆசியாவிலேயே பெரிய கண் பார்வையற்றோர் பள்ளியை பாளையங்கோட்டையில் தொடங்கிய ஆஸ்க்வித் ஆகியோரின் வரலாறு, நெல்லைச் சீமையில் 19-ஆம் நூற்றாண்டில் பல்வேறு கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்ட […]

Read more

இலை உதிர்வதைப் போல

இலை உதிர்வதைப் போல, இரா.நாறும்பூநாதன், நூல் வனம், பக்.192, விலை ரூ.150. வாழ்க்கை முழுக்க மனிதன், சக மனிதர்களுடன், இடங்கள், மரங்கள், செடி, கொடிகளுடன், வளர்ப்பு பிராணிகளுடன் எல்லாம் தொடர்புடையவனாக இருக்கிறான். வாழ்க்கையில் ஏற்படும் பல்வேறு நெருக்கடிகளினால் சில தொடர்புகளை மனிதர்கள் விட்டுப் பிரிகிறார்கள். புதிய தொடர்புகள் வாழ்க்கையில் ஏற்படுகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள 26 சிறுகதைகளில் வரும் மனிதர்கள் எல்லாரும் இந்தத் தொடர்புகளின் அருமையை உணர்ந்தவர்கள். தொடர்புகளைவிட்டுப் பிரிய மனமில்லாதவர்கள். சக மனிதர்களை மட்டுமல்ல, செடியை, மரத்தை, ஆடு, மாடுகளை, இடங்களைப் பிரிய நேர்ந்தால், […]

Read more