குறுந்தொகைப் பாடல்கள் (1-25)
குறுந்தொகைப் பாடல்கள் (1-25), குழ.கதிரேசன், ஐந்திணைப் பதிப்பகம், பக்.136, விலை 80ரூ. குழந்தைகள் மனத்தைக் குளிர்வித்துப் பல குழந்தை இலக்கியங்களைப் படைத்த குழந்தைக் கவிஞர் குழ.கதிரேசன், இப்போது இலக்கிய இன்பம் நல்கும் நல்ல குறுந்தொகை எனப் போற்றப்படும் குறுந்தொகை பாடல்களுக்கு விளக்கம் தந்துள்ளார். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் முதல் இருபத்தைந்து பாடல்களுக்கான எளிய விளக்கத்துடன், அப்பாடல்களில் இடம்பெறும் மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள், முதல், கரு, உரிப்பொருள்களுக்கான விளக்கங்களையும் மாணவர்கள்புரிந்து கொள்ளும் வகையில் தந்திருப்பது சிறப்பு. 2500 ஆண்டுகளுக்கு முந்தைய மூல […]
Read more