சங்க கால வானிலை
சங்க கால வானிலை, கு.வை.பாலசுப்பிரமணியன், முக்கடல், விலைரூ.300 வானிலைக்கும், காலநிலைக்கும் உள்ள வேறுபாட்டை விளக்கத் துவங்கி, சங்க இலக்கியங்கள் தெளிவுபடுத்தும் வானிலைச் சிந்தனைகளை ஆய்வு நோக்குடன் வெளிப்படுத்தியுள்ள நுால். காற்று வீசுதல் குறித்தும், மழை பொழிவது குறித்தும், 2000 ஆண்டுகளுக்கு முன் தமிழர் கொண்டிருந்த கருத்தை, இலக்கியச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறது. புகை மேகம், பஞ்சு மேகம், யானை மேகம் என்று உருவெளித் தோற்றத்தை வைத்து மேகத்தை அடையாளப்படுத்தியது அறிவியல் நுட்பத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. ஆறு காலங்களாக, ஓர் ஆண்டு பிரிக்கப்பட்டுள்ள தன்மை, மாறாமல் இருப்பதை, வானிலை […]
Read more