மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும்
மறக்கப்பட்ட திவான் கலிபுல்லாவும் புதுக்கோட்டை சமஸ்தான வரலாறும், கே.எம்.சரீப், சமூக உயிரோட்டம் வெளியீடு, விலை 500ரூ. புதுக்கோட்டை சமஸ்தானத்தின் துணை ஆட்சியாளர், முதல் கவுன்சிலர், திவான் முதலான முக்கியப் பதவிகளை வகித்தவர் கலிபுல்லா. விளிம்புநிலை மக்களுக்காக சமஸ்தானத்தில் பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திய முன்னோடி. அவற்றில் முக்கியமானவை, மதிய உணவுத் திட்டமும் தவணை முறைக் கடனில் வீட்டு மனைகள் அளிக்கும் திட்டமும். துரதிர்ஷ்டவசமாக, அவரைக் குறித்த பதிவுகள் அருகிவிட்டன. அவரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில் பல்வேறு தரவுகளைச் சேகரித்து நூல்வடிவம் வழங்கியிருக்கிறார் கே.எம். சரீப். […]
Read more