தீரன் திப்பு சுல்தான்

தீரன் திப்பு சுல்தான், குன்றில்குமார், சங்கர்பதிப்பகம், விலை 190ரூ. வெள்யைர் ஆட்சியை எதிர்த்துப் போர் புரிந்த மன்னர்களில் முக்கியமானவர் திப்பு சுல்தான். மனித நேயம் படைத்தவர். மத நல்லிணக்கம் கொண்டவர். எதிரிகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிய பெண்ணையே மணந்து, தன் நன்றியறிதலைக் காட்டியவர். பகையரசு, குடும்பப் பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற தன் படைத் தலைவனையே சுட்டுக்கொன்ற நீதிமான். அந்த மாவீரனின் வரலாற்றை வேகமும், விறுவிறுப்பும் கலந்த நடையில் எழுதியுள்ளார், குன்றில் குமார். படிக்கும்போது, காட்சிகள் திரைப்படம் போல நம் மனக்கண் முன் ஓடுகின்றன. […]

Read more