திருப்பா இலக்கியம்
திருப்பா இலக்கியம், ச. வனிதா, சபாபதி வெளியீடு, பக்.164, விலை ரூ. 120. தமிழும் சமயமும் பிரித்துப்பார்க்க முடியாதவை. சமயச் சான்றோர் பலரின் காலத்தை வென்ற படைப்புகள் தமிழ் இலக்கியத்துக்கு செழுமையும், பெருமையும் சேர்ப்பவையாக உள்ளன. அருணகிரிநாதர் படைத்த திருப்புகழ், வள்ளலார் படைத்த திருவருட்பா போன்ற நூல்களின் வரிசையில் வைத்து அழகுபார்க்கவும், வாய்மணக்கப் பாடிப்பார்க்கவும் தக்கது திருப்பா. அதைப் படைத்தவர் "பாம்பன் சுவாமிகள்' என அழைக்கப்படும் குமரகுருதாச சுவாமிகள். எத்தனையோ அற்புத நூல்களைப் படைத்திருந்தாலும் பாம்பன் சுவாமிகளின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கது திருப்பாதான். இவரது அனைத்து நூல்களும் […]
Read more