தனிமனிதன்

தனிமனிதன்,  சிந்து சீனு,  லாவண்யா புத்தகாலயம், பக். 110, விலை  ரூ.110. எளிய மனிதர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளையும், அவர்தம் மனக் குமுறல்களையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பே ‘தனிமனிதன். அதிகார வர்க்கமும், மேல்தட்டு சமூகமும் விளிம்புநிலை மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே எப்போதும் குறியாக உள்ளன. அடித்தட்டு மக்களின் மனக்குமுறல்களுக்கு முழுமையான தீர்வு கிடைப்பது இல்லை. இந்த அவலத்தை சில கதாபாத்திரங்கள் மூலமாக ‘தனிமனிதன்’ பதிவு செய்துள்ளது. குப்பை அள்ளும் தொழிலாளி, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக வேலையை இழக்கும் தொழிலாளி, சுமை […]

Read more