தனிமனிதன்
தனிமனிதன், சிந்து சீனு, லாவண்யா புத்தகாலயம், பக். 110, விலை ரூ.110.
எளிய மனிதர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளையும், அவர்தம் மனக் குமுறல்களையும் மையப்படுத்தி எழுதப்பட்ட 9 சிறுகதைகளின் தொகுப்பே ‘தனிமனிதன்.
அதிகார வர்க்கமும், மேல்தட்டு சமூகமும் விளிம்புநிலை மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுவதிலேயே எப்போதும் குறியாக உள்ளன. அடித்தட்டு மக்களின் மனக்குமுறல்களுக்கு முழுமையான தீர்வு கிடைப்பது இல்லை. இந்த அவலத்தை சில கதாபாத்திரங்கள் மூலமாக ‘தனிமனிதன்’ பதிவு செய்துள்ளது.
குப்பை அள்ளும் தொழிலாளி, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர், எதிர்பாராதவிதமாக வேலையை இழக்கும் தொழிலாளி, சுமை தூக்கும் தொழிலாளி, எரிவாயு உருளை சுமக்கும் தொழிலாளி, ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகள் ஆகியவற்றால் அடித்தட்டு மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அவமானங்களையும் வலிகளையும் தொட்டுச் செல்கிறது இச் சிறுகதைத் தொகுப்பு.
‘சிலிண்டர் பாய்ஸ்’ என்ற சிறுகதையில் எரிவாயு உருளை விநியோக நிறுவனத்தின் வாகன ஓட்டுநர் மாரடைப்பினால் வாகனத்திலேயே இறந்துவிடுகிறார். இச் செய்தியை கேள்விப்பட்ட அவரது முதலாளி சிறிதும் கருணையின்றி, நாளையிலிருந்து வேலைக்கு வேற ஆள் பாக்கணும் என்று கூறுகிறார். மனித மனங்களில் அடிப்படை அறம் சிறிதும் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதாய் இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் உள்ளன.
நன்றி: தினமணி, 27/9/21
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818