சிரிக்கவும் சிந்திக்கவும்

சிரிக்கவும் சிந்திக்கவும், இலங்கை ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. இலங்கையைச் சேர்ந்த ஆ.ரகுபதி பாலஸ்ரீதரன், நகைச்சுவையாக எழுதுவதில் புகழ் பெற்றவர். அவர் எழுதிய நகைச்சுவை கதைகள் அடங்கிய புத்தகம் இது. சிறுவர் நகைச்சுவைக் கதைகள், கணவன் – மனைவி கதைகள், மிருகங்களின் கதைகள், பைத்தியக்காரக் கதைகள், ஒரு பக்கக் கதைகள்.. இப்படி பல வகையான கதைகள் இதில் அடங்கியுள்ளன. சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கவும் வேண்டும் என்ற நோக்கத்தில், ஆசிரியர் வெற்றி பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். நன்றி: தினத்தந்தி, 6/12/2017.

Read more

மறைந்தும் மறையாதவர்கள்

மறைந்தும் மறையாதவர்கள், ஏ.ஆர். பாலஸ்ரீதரன், சுமதி பதிப்பகம், விலை 250ரூ. அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், நாட்டுக்கு உழைத்த உத்தமர்கள், மேல்நாட்டு சாதனையாளர்கள் வாழ்க்கை வரலாற்றை கூறும் நூல். நேதாஜி, இந்திரா காந்தி, கப்பலோட்டிய தமிழன், வ.உ. சிதம்பரனார், மகாகவி பாரதியார், மறைமலையடிகள், பேரறிஞர் அண்ணா, கிருபானந்தவாரியார், எம்.கே. தியாகராஜாகவதர், மு. வரதராசனார் உள்ளிட்ட 49 பேர்களின் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. அதிகமாக வளர்த்தாமலும், மிகவும் சுருக்கி விடாமலும் மிகத் திறமையாக வரலாறுகளை சுவைபட எழுதியுள்ளார் இலங்கைத் தமிழரான ஏ.ஆர். பாலஸ்ரீதரன். நன்றி: தினத்தந்தி, 5/10/2016.

Read more