இலக்கிய முத்துக்கள் 20

இலக்கிய முத்துக்கள் 20 (என் வாசிப்பின் வாசம்),  ஜெ.பாஸ்கரன், அர்ஜுன் ராம் பப்ளிகேஷன்ஸ்,  பக்.184, விலை ரூ.200. தமிழின் புகழ்பெற்ற இருபது படைப்பாளிகளின் படைப்புகள் குறித்த விரிவான அறிமுகமாக மலர்ந்திருக்கிறது இந்நூல். அசோகமித்திரன், கி.ரா., ந.பிச்சமூர்த்தி, ஆ.மாதவன், தி.ஜானகிராமன், லா.ச.ரா., சுந்தரராமசாமி, இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் உள்ளிட்ட தமிழின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளைப் பற்றிய அருமையான பதிவாக மலர்ந்திருக்கிறது இந்நூல். இவர்களிலிருந்து சற்றே வேறுபடும் சுஜாதா, பாக்கிய ராமசாமி, ரா.கி.ரங்கராஜன், பரணிதரன், தேவன் ஆகியோரின் படைப்புகளைப் பற்றியும் பேசுகிறது. ஒரு படைப்பாளி, அவர் எழுதிய […]

Read more

அது ஒரு கனாக்காலம்

அது ஒரு கனாக்காலம், ஜெ.பாஸ்கரன், மணிமேகலைப்பிரசுரம், விலை 100ரூ. சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் சந்தேகமில்லை. சைக்கிள் விட்ட துள்ளலையும், கல்யாணங்களில் ஆனந்தப்பட்டதையும், பெண் பார்த்த அப்பாவித் தனத்தையும், வாழைப்பூ வடை சாப்பிட்ட நாக்கு ரசனையையும், துபாய் அனுபவிப்பையும், லண்டனில் படித்ததையும், அகஸ்தியர் கோவில் அமைப்பையும், அம்மாவின் அரவணைப்பையும், சினிமா மோகத்தையும் நினைவுகூர்வதாக அமைந்துள்ளது இந்நுால். சில நினைவுகள் காலத்தால் அழியாதவை. இன்று நினைத்தாலும் இனிமையான உணர்வலைகளை உள்ளமெங்கும் தவழ விடுபவை என்பதில் […]

Read more