யாப்பு விளக்கம்

யாப்பு விளக்கம் (தமிழ்ச் செய்யுள் இலக்கணம்), ப.எழில்வாணன், தமிழ்வாணன் பதிப்பகம், பக்.572, விலை ரூ.650. தமிழில் உள்ள யாப்பிலக்கணங்கள்தாம் தொன்மையும் முதன்மையும் கொண்டவையாகத் திகழ்கின்றன. தொல்காப்பியத்திற்குப் பிறகு புலவர்கள் பலர் யாப்பிலக்கணம் செய்துள்ளனர் என்றாலும், தொல்காப்பியத்திற்குப் பிறகு கிடைத்த இரு யாப்பிலக்கண நூல்கள், அமிர்தசாகரர் என்பவரால் எழுதப்பட்ட யாப்பருங்கலமும், யாப்பருங்கலக்காரிகையும்தான். இந்நூல்களுக்குப் பிறகு சுமார் முப்பது யாப்பிலக்கண நூல்கள் வந்ததாகத் தெரிய வருகிறது. இந்நூல் இயற்றமிழ்ப் பாக்கள், இசைத்தமிழ்ப் பாக்கள், பொது, சித்திரப் பாக்கள் ஆகிய நான்கு இயல்களைக் கொண்டு உறுப்பியல், பாவினங்கள், புதுப் […]

Read more