காப்பியங்கள் அணிந்த காலணிகள்
காப்பியங்கள் அணிந்த காலணிகள், தாமல் கோ.சரவணன், கோமல் பதிப்பகம், விலை 50ரூ. கம்பராமாயணத்தில் இடம்பெறும் பாதுகை, சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் காற்சிலம்பு ஆகிய இரண்டையும் பற்றிய இந்த நூல், பல விவாதங்களை முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. ராமாயணத்தில் பாதுகை பற்றிய இடங்களை நுட்பமாக ஆராய்ந்து, அதை எந்தெந்த கோணங்களில் வெளிப்படுத்த முடியும் என்பதை தடைவிடைகளோடு ஆழமாகச் சிந்தித்துள்ளார் ஆசிரியர். பரதன் பாதுகையை ராமனிடத்திருந்து பெற்றமை பற்றி நுணுக்கமாக ஆராயும் நூலாசிரியர், பாதுகையும், காற்சிலம்பும் என்ற முதல் கட்டுரையில், ‘பாதுகை என்ற காலணி மனிதனாய் பிறந்து தெய்வத்திற்கு உரியது. […]
Read more