திருக்குறளில் தன்னம்பிக்கை
திருக்குறளில் தன்னம்பிக்கை, ஜெ.கமலநாதன், குமரன் பதிப்பகம், பக்.104, விலை 40ரூ. திருக்குறளில் கூறப்பட்டுள்ள மேலாண்மை அறிவியல் கருத்துக்களை முன்னிறுத்துகிறது. உலகின் மிகச் சிறந்த ஆங்கில தன்னம்பிக்கை நுால்களில் கூறப்பட்டுள்ள ஆளுமைப் பண்புகள் பல உள்ளன. அவை யாவும், ஏற்கனவே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறளில் வலியுறுத்தப்பட்டுள்ள பெரும் விந்தையையும், பெருமையையும் நுாலாசிரியர் தக்க சான்றுகளோடு பதிவு செய்து, சிறப்பு சேர்க்கிறார். இந்நுால், இலக்கிய அன்பர்கள் அனைவர் கைகளிலும் தவழும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 7/1/2018.
Read more