திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம்

திருநாவுக்கரசர் தேவராத்தில் பிற சமயம், புலவர் இரா.நாராயணன், வனிதா பதிப்பகம், விலை 160ரூ. திருநாவுக்கரசர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்; நாயன்மார்கள் அறுபத்து மூவருள் ஒருவர். 81 அகவை வாழ்ந்து பக்தி இயக்கத்தில் தொண்டினை இணைத்தவர். சிவ நெறிக் குடியில் பிறந்த இவர், இளமையில் சமண சமயத்தின் உயிரிரக்கக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அதில் சேர்ந்து சிறப்பு மிகப்பெற்று, தருமசேனர் எனும் பெயருடன் வாழ்ந்தார். பெற்றோர் இட்டபெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியார் வேண்டுதலால், சிவன் தருமசேனருக்கு சூலை நோய் தந்து, சிவனருள் திருநீற்றால் நோய்க் கொடுமையிலிருந்து […]

Read more