திருப்புகழும் திருத்தலங்களும்

திருப்புகழும் திருத்தலங்களும், உரையாசிரியர் சண்முக.செல்வகணபதி, தஞ்சை பெரிய கோயில் வார வழிபாட்டு மன்றம், தஞ்சாவூர், பக். 152, விலை 60ரூ. நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் தொடங்கி, முருகனைப் போற்றிப் பாடும் நூல்கள் பல இருப்பினும், தமிழ் வளம், சொல் வன்மை, தொடை நயம், சந்தப் பொலிவு, கற்பனைத் திறன், பக்திப் பெருக்கு போன்ற கவிதைப் பண்புகளால் தமிழ் பக்தி இலக்கிய வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தில் உள்ளது அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழ். முருகப் பெருமானின் திருவண்ணாமலையில் அருணகிரிநாதரை தடுத்தாட்கெண்டபோது முத்தைத் திரு பத்தித் திருநகை என்று […]

Read more