தேவார மூவர் அருளிய செய்யுளியல்

தேவார மூவர் அருளிய செய்யுளியல், ம,வே. பசுபதி, தெய்வத்திருமகள், விலை 150ரூ. செய்யுள் இயற்றுவதும், மரபுக் கவிதை இயற்றுவதும் இன்றைக்கு அருகிப்போய் வருவதால், “யாப்பு’ என்றால் என்னவென்று மாணவர்கள் கேட்கும் நிலை உள்ளது. காலத்திற்கேற்ற நூலாக இது வெளிவந்திருப்பது சிறப்பு. தேவார மூவரான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகியோரின் தேவாரப் பாடல்களில் கையாளப்பட்டுள்ள செய்யுளியல் குறித்து விரிவாகப் பேசுகிறது இந்நூல். மூவர் தேவாரங்களையும் தோத்திரப் பாடல்களாக மட்டும் பார்க்காமல், இலக்கணக் கண்கொண்டு ஆராய்ந்திருப்பது பக்தி இலக்கியத்திற்குக் கிடைத்த மிகச்சிறந்த இலக்கண நூல் இதுவென்று […]

Read more