நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
நா.வானமாமலை நுாற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள், இரா.காமராசு, சாகித்ய அகடமி, விலைரூ.315. சாகித்ய அகாடமி தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றுக்குப் பெரும்பாங்காற்றிய ஆளுமைகளுக்கு நுாற்றாண்டு நினைவு விழாக்களை நடத்தியது. அந்த வகையில் பேராசிரியர் நா.வானமாமலை நுாற்றாண்டு விழாவையொட்டி நடத்திய கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு நுால். சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ.அரசு, நா.வா.,வின் ஒட்டுமொத்த பங்களிப்புகள் குறித்த நுட்பமான மதிப்பீட்டையும், தமிழாய்வுகளில் அவரது இடத்தையும், ‘பேராசிரியர் நா.வானமாமலையின் அரை நுாற்றாண்டு காலப்பயணம்’ என்ற கட்டுரையில் முன்வைக்கிறார். பெரியார் பல்கலைக் கழகத்தின் […]
Read more