நீர் மேலாண்மை

நீர் மேலாண்மை, பெருமாங்குப்பம் சா. சம்பத்து, ரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ், பக். 256, விலை 200ரூ. “நீரின்றி அமையாது உலகு‘’ என்று சொல்லித் தெரியும் நிலை இப்போதில்லை. ஆனால் நீரைப் பாதுகாக்கும் முயற்சிகள், நீர் வளத்தை மேம்படுத்தும் செயல்களை எல்லாம் நாம் செய்கிறோமோ? என்றால், இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். இந்நூலில் நீரின் தோற்றம், நீரின் இன்றியமையாமை, நீர் வளத்தைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற விவரங்களை மிகவும் எளிமையாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். தேசிய நதிநீர் இணைப்பு சாத்தியமா? ஏன் நதிகளை இணைக்க வேண்டும்? […]

Read more