பன்முக நோக்கில் புறநாநூறு
பன்முக நோக்கில் புறநாநூறு, பேராசிரியர் இரா.மோகன், வானதி பதிப்பகம், பக்.252, விலை 160ரூ. மு.வ.,வின் செல்லப்பிள்ளை எனத்தகும் இரா.மோகன் எழுதியுள்ள இவ்வாய்வு நுால், புறநானுாற்றைப் பல்வேறு கோணங்களில் காட்டியுள்ளது. ஐந்து பெரும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட இந்நுாலில், 40 தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. சங்கச் சான்றோர்களின் ஆளுமைப் பண்புகள், புறநானுாற்றில் புதுமை, நீராதாரத்தின் அருமை, பண்டைத்தமிழர் மெய்யியல் திறம் எனப் பல்வேறு திசைகளில் ஆய்வு பரந்து விரிந்து செல்கிறது. மாசாத்தியார் காட்டும் மறக்குடி மங்கையர் மாண்பு, சான்றாண்மைக்கு ஆழி பெருஞ்சித்திரனார், உலகின் ஒப்பற்ற கவிஞர் அவ்வையார், […]
Read more