தகைசால் தமிழறிஞர்கள்

தகைசால் தமிழறிஞர்கள், புலவர் சுப்பு.லட்சுமணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.200. வீரமாமுனிவர் காலம் தொட்டு, அண்மையில் மறைந்த சிலம்பொலி செல்லப்பன் வரை இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்களின் வரலாற்றுச் சுருக்கம் இந்த நுாலில் அடங்கியுள்ளது. ஆறுமுகநாவலர், வள்ளலார், பாரதி, பாரதிதாசன், வ.உ.சி., – உ.வே.சா., மறைமலை அடிகள் என பட்டியல் நீள்கிறது. பிறப்பு, கல்வி, இலக்கியப்பணிகள், மறைவு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அறிஞர்களின் பட்டியல் அகர வரிசையில் அமைந்துள்ளதும், படங்களுடன் பிரசுரம் ஆகியுள்ளதும் சிறப்பு. அறிஞர்களின் வரலாற்றைக் கூறும் நல்ல கையேடு. – பின்னலுாரான். நன்றி: தினமலர். […]

Read more

திருக்குறள் புத்துரை

திருக்குறள் புத்துரை, புலவர் சுப்பு.லட்சுமணன், மணிவாசகர் பதிப்பகம், விலைரூ.150. திருக்குறளுக்கு விளக்கவுரை வழங்கியுள்ள நுால். பிற உரைகளைப் போலவே குறள்களின் கீழே உரைகளைத் தந்திருப்பதோடு, சிலவற்றில் இலக்கணக் குறிப்பும், அதிகாரத் தலைப்புகளுக்கு சிறு விளக்கமும் தந்திருப்பது சிறப்பு. வழமையான விளக்கங்களாக இருப்பினும் எளிய நடையில் அமைந்திருக்கின்றன. குறள்கள் பலவற்றில் மாறுபட்ட கருத்துகள் மற்றும் பொருள்கள் பிற உரைகளிலிருந்து முற்றிலும் மாறுபடுகின்றன. தாரணமாக, எண்குணத்தான் என்பதற்கு ‘எண்ணத்தக்க குணத்தவன்’ என்றும், வாலறிவன் என்பதற்கு ‘மெய்யறிவு கொண்டவன்’ என்றும், பிறவாழி என்பதை, ‘பிற பொருளின்பம்’ என்றும், இறைவனடி […]

Read more