பேய்ச்சி
பேய்ச்சி, ம.நவீன், வல்லினம், யாவரும் வெளியீடு, விலை 300ரூ. வசைச்சொற்கள் அளவுகோல் ஆகுமா? ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை (வெளியீடு: வல்லினம் பதிப்பகம், மலேசியா; யாவரும் பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு) மலேசிய அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. தடை கோரியவர்கள் சில தமிழ் எழுத்தாளர்கள்; தமிழ் அமைப்புகள் எனத் தெரிகிறது. தடை கோர முக்கியக் காரணம், இந்நாவலில் பாலுறுப்புகளையும் சாதியையும் குறிக்கும் வசைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பது. பாத்திரங்களின் உரையாடலில் வசைகள் வருவதும் அவற்றில் பாலுறுப்பு, பாலுறவு தொடர்பானவை அமைவதும் இயல்பானதே. கீழ், மேல் என எதிரிடையைக் கொண்டது சாதியமைப்பு. […]
Read more