மூங்கில்

மூங்கில், சுஷில் குமார், யாவரும் வெளியீடு,விலை: ரூ.200 சுஷில்குமாரின் ‘மூங்கில்’ சிறுகதைத் தொகுப்பானது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. தமிழ்ச் சிறுகதை, வாழ்க்கையிலிருந்து விலகி நகர்ந்துவரும் இந்தச் சூழலில் இந்தக் கதைகள் வாசிப்புக்கு ஆசுவாசம் அளிக்கின்றன. இந்தத் தொகுப்பில் 12 சிறுகதைகளும் வெவ்வேறு விதமான பின்னணியைக் கொண்டவை. சுந்தர ராமசாமி, நாஞ்சில்நாடன், ஜெயமோகன் கதைகளில் சித்தரிக்கப்பட்ட நாகர்கோவில் வட்டாரப் பகுதிகளின் யதார்த்தமான புதிய வாழ்க்கையை இந்தக் கதைகளில் பார்க்க முடிகிறது. நாகர்கோவிலின் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை முறை, அவர்களது புழங்குமொழி எனத் தத்ரூபமான […]

Read more

பேய்ச்சி

பேய்ச்சி, ம.நவீன், வல்லினம், யாவரும் வெளியீடு, விலை 300ரூ. வசைச்சொற்கள் அளவுகோல் ஆகுமா? ம.நவீன் எழுதிய ‘பேய்ச்சி’ நாவலை (வெளியீடு: வல்லினம் பதிப்பகம், மலேசியா; யாவரும் பப்ளிஷர்ஸ், தமிழ்நாடு) மலேசிய அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. தடை கோரியவர்கள் சில தமிழ் எழுத்தாளர்கள்; தமிழ் அமைப்புகள் எனத் தெரிகிறது. தடை கோர முக்கியக் காரணம், இந்நாவலில் பாலுறுப்புகளையும் சாதியையும் குறிக்கும் வசைச்சொற்கள் இடம்பெற்றுள்ளன என்பது. பாத்திரங்களின் உரையாடலில் வசைகள் வருவதும் அவற்றில் பாலுறுப்பு, பாலுறவு தொடர்பானவை அமைவதும் இயல்பானதே. கீழ், மேல் என எதிரிடையைக் கொண்டது சாதியமைப்பு. […]

Read more