பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்), ம.திருமலை, மீனாட்சி புத்தக நிலையம்,  பக்.23.,  விலை ரூ.200. தமிழின் தொன்மையையும், இலக்கியப் பெருமையையும் எக்காலத் தலைமுறைக்கும் எடுத்துரைக்கும் வளங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள். எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பெரும் தொகுப்பில் பொருநராற்றுப்படையானது பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வரிசையில் இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படும் நூலாகும். இசைப்பாடல் கலைஞர்களான பொருநர்கள் வறுமையில் வாடிய நிலையில், அந்த வறுமையைப் போக்க அரசர்களை நாடிச்சென்று அவர்தம் பெருமைகளைப் பாடி பரிசில் பெற்று வாழ்ந்ததை பொருநராற்றுப்படையின் மூலம் அறியமுடிகிறது. இந்நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தோடு, பொருநராற்றுப்படையை ஒப்பிட்டு […]

Read more