மாசாணியம்மன் வழிபாடு

மாசாணியம்மன் வழிபாடு, தே.ஞானசேகரன், காவ்யா, விலைரூ.170 கோவை சொக்கம்புதுாரில் வாழும் தேவேந்திரர்களின் குலதெய்வம் என்னும் துணைத் தலைப்புடன் வெளிவந்திருக்கும் நுால் மாசாணியம்மன் வழிபாடு. மாசாணியம்மன் வழிபாடு பற்றி தெரிவிப்பதற்கு முன், பழங்காலம் முதல் இருந்து வரும் சிறுதெய்வ வழிபாட்டையும் தொன்மத்தையும் விளக்குகிறது. பெருந்தெய்வ வழிபாட்டிற்கும், சிறுதெய்வ வழிபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகளையும், தெய்வ நம்பிக்கையுடன் கூடிய சடங்குகளின் விளக்கங்களையும் வரையறுக்கிறது. கொங்குநாட்டில் வாழும் தேவேந்திர குல வேளாளர் வரலாற்றைத் தெளிவுபடுத்துகிறது. மாசாணியம்மன் தொடர்பான கதைகளையும், கதைப் பாடல்களையும், போற்றிப் பாடல்களையும் தேவைப்படும் இடங்களில் எல்லாம் பயன்படுத்தியுள்ளது. […]

Read more