மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்)

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்) , உரையாசிரியர்: கரு.முத்தய்யா, முதல் பாகம், பக்.384,  விலை ரூ.300, இரண்டாம் பாகம்,  பக்.384, விலை ரூ.300. தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று போற்றப்படுபனவற்றில் சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று நூல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. மணிமேகலை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா. அவரைத் தொடர்ந்து வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றோரும் உரையெழுதிப் பதிப்பித்தனர். அந்த வகையில் மணிமேகலைக்கு செறிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்ட உரையுடன் வெளிவந்துள்ள நூல் இது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சிறந்த சீர்திருத்த நூல் […]

Read more