பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம்

பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.150 அறிவியக்க பேரவை தலைவராகவும், டில்லி பல்கலைக் கழக தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றியவர் பேராசிரியர் சாலை இளந்திரையன். அறிவியல் ரீதியான சிந்தனையை வளர்க்க முயன்றனர். அவரது இணையர் பேராசிரியை சாலினி இளந்திரையனுடன் இந்த பணியில் ஈடுபட்டு வந்தார். இவர்களின் தமிழ் மற்றும் அறிவியக்கத் தொண்டு மற்றும் வாழ்க்கை பற்றி எடுத்துக் கூறும் நுால். சிறு கிராமத்தில் பிறந்து, கல்வியால் உயர்ந்தவர். உரைவீச்சு என்ற அறிவு எழுச்சிக் கவிதைகள் […]

Read more

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர்

உலகப் பெரும் புலவர் வீரமாமுனிவர், முதுமுனைவர் பால் வளன் அரசு, கதிரவன் பதிப்பகம், விலைரூ.120. வீரமாமுனிவர் இத்தாலி நாட்டில் இருந்து தமிழகத்துக்கு, 18ம் நுாற்றாண்டில் வருகை தந்தவர். தன் பெயரைத் தைரியநாதர் என்று ஆக்கியவர். மதுரைப் புலவர் பெருமக்கள் வீரமாமுனிவர் என்றும், திருமதுரைச் செந்தமிழ்த் தேசிகர் என்றும் அழைத்து மகிழ்ந்தனர். தேம்பாவணி, அன்னை அழுங்கல் அந்தாதி, திருக்காவலுார் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, அடைக்கல மாலை, பெரியநாயகி மேல் பெண் கலிப்பா ஆகியவற்றை படிப்போர், வீரமாமுனிவரின் இலக்கிய ஆளுமையை உணர முடியும்.இந்த நுால் ஒரு இலக்கியப் […]

Read more