அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?

அந்நிய உணவுக்கு அடிமையாகலாமா?,  ஆர்.எஸ்.நாராயணன்,  யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.86, விலை ரூ.70; நூலின் முதல் கட்டுரையின் தலைப்பே நூலின் தலைப்புமாகியிருக்கிறது. எனினும் நூல் முழுக்க உணவு சார்ந்த பிரச்னைகளையே பேசியிருக்கிறது. நமதுநாட்டின் தீங்கற்ற பல உணவுவகைகள் காணாமற் போயிருக்க, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு பல வேதிப்பொருள்கள் கலக்கப்பட்ட உணவுப் பொருள்கள் நமக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் ஜங்க் உணவுக்குப் பலவிதமான தடைகளும், வரிகளும், கட்டுப்பாடுகளும் உள்ளபோது இந்தியாவில் அதற்குக் கட்டுப்பாடில்லாத சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ரொட்டி மாவில் பொட்டாசியம் புரோமேட்டும் அயோடேட்டும் சேர்ப்பது ஐரோப்பிய […]

Read more

உங்களாலும் முடியும்

உங்களாலும் முடியும்,  பி.வி.பட்டாபிராமன், யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ்,  பக்.280, விலை ரூ.230. வெற்றியாளர்கள் என்றால் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அல்ல. பிரச்னைகள் எதிர்ப்பட்டாலும், இடையில் கைவிடாதவர்களே வெற்றியாளர்கள். எந்தத் துறையிலும் நாம் வெற்றி பெற வேண்டுமானால் முதலில் தேவைப்படுவது நம்பிக்கையே. நம்பிக்கையே உண்மையான முதலீடு.ஏழையாகப் பிறப்பது என்பது உங்கள் கையில் இல்லை.ஆனால் ஏழையாகவே இறப்பதா? என்பது உங்கள் கையில் உள்ளது. நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டிய ஓர் உண்மை உள்ளது. அது என்னவென்றால், ஒவ்வொரு விஷயத்திலும் மாற்றம் செய்து கொள்வது. நிலைமைகள் மாறிக் கொண்டிருக்கின்றன. அதற்கு […]

Read more

வெற்றி உங்களுடையதே

வெற்றி உங்களுடையதே, பி.வி.பட்டாபிராம்,  யுனிக் மீடியா இன்டெகரேட்டர்ஸ், பக்.308, விலை ரூ.250. வழக்கமாக வெளிவரும் சுயமுன்னேற்ற நூல்களிலிருந்து பெரிதும் வேறுபடும் நூல். சமுதாய நிகழ்வுகள் தனிமனிதனைப் பாதிக்கின்றன. அதையும் மீறி தனிமனிதன் முன்னேற வேண்டியிருக்கிறது. சமுதாயப் பிரச்னைகளைத் தீர்க்க முயற்சிகளைச் செய்து கொண்டே, மனதளவில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளும் வழிகளையும் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறும் நூலாசிரியர், வழிகளாகத் தேர்வு செய்திருப்பது மனிதனின் மனதை மாற்றும் முயற்சிகளையே. மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? […]

Read more