வள்ளலார் மூட்டிய புரட்சி

வள்ளலார் மூட்டிய புரட்சி, பழ.நெடுமாறன், ஐந்திணை வெளியீட்டகம், பக். 160, விலை ரூ.150. திருவருட்பிரகாச வள்ளலாரை ஓர் ஆன்மிகவாதியாக மிகப் பெரிய ஞானியாக மட்டுமே அறிந்து வைத்துள்ளவர்களுக்கு அவரை மிகச்சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக, மனித நேயப் பண்பாளராக, மொழிப்பற்றாளராக இன்னும் பல்வேறு கோணங்களில் அவரது அருமை பெருமைகளை இந்நூலின் வாயிலாக எடுத்தியம்பி இருக்கிறார் பழ.நெடுமாறன். 19-ஆம் நூற்றாண்டின் தனிப்பெரும் சிந்தனையாளராக வள்ளலார் சிறப்பிடம் பெற்றுள்ளார். வள்ளலார் பெருமான் உலகிற்கு வழங்கிய அழியா முழு முதற்கோட்பாடு ஒன்றே ஒன்றுதான். அதுவே சீவகாருண்யம் என்னும் உயிரிரக்கப் பண்பு. […]

Read more