ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்
ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம், விஜய் மகேந்திரன், புலம் வெளியீடு, விலை: ரூ.150. தமிழ் சினிமா இசையை சர்வதேசக் கவனத்துக்கு எடுத்துச் சென்ற ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை, திரைப்பயணம் குறித்த அறியப்படாத, சுவாரஸ்யமான, சில நேரம் ஆச்சரியப்பட வைக்கும் தகவல்களால் நிரம்பியுள்ளது ‘ஏ.ஆர்.ரஹ்மான்: நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்’ நூல். தொலைக்காட்சி விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக்கொண்டிருந்த திலீப்பாக இருந்த காலம்தொட்டு, ரஹ்மானை ஒரு ரசிகராகப் பின்தொடர்ந்துவரும் விஜய் மகேந்திரன், ரசனையைத் தாண்டி ஒரு பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய சமநிலை நோக்குடன் இந்தக் கட்டுரைகளை எழுதியுள்ளார். […]
Read more