விந்தன் கதைகள்

விந்தன் கதைகள், தொகுப்பும் பதிப்பும் சு.சண்முகசுந்தரம், காவ்யா பதிப்பகம், பக். 1121; ரூ.1,100. அச்சுக் கோர்ப்புத் தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி எழுத்தாளர், கவிஞர், கதாசிரியர், கட்டுரையாளர், திரைக்கதை வசனகர்த்தா எனப் பன்முகத் திறமையாளராக தன்னை வெளிப்படுத்தியவர் விந்தன். 1939 முதல் சுமார் 25 வருடங்கள்அன்றைய பல்வேறு முன்னணி இதழ்களில் அவர் எழுதி வெளிவந்த சிறுகதைகள், குட்டிக்கதைகள், மிஸ்டர் விக்ரமாதித்தன் கதைகள் ஆகியவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பே இந்நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எளிய மக்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டவை. அவர்கள் அன்றாடம் சந்திக்கும் அடிப்படைப் […]

Read more