விபரீத ஆட்டம்
விபரீத ஆட்டம், சுப்ரஜா, வாதினி, விலை 120ரூ. நாவல் பேசியிருப்பது சுப்ரஜாவின் திக் திக் திகில் நடனமல்ல, விளையாட்டு; அதுவும் மரண விளையாட்டு. இரட்டை பெண்களில் ஒருத்தி காணாமல் போகிறாள். அவள் தலை மறைந்ததன் ரகசியம் என்ன என்பதை அறிய வரும் அவளின் குடும்பத்தினரை, அடுத்தடுத்து விபரீதங்கள் துரத்துகின்றன. இறுதியில் மர்மம் விடுபடுகிறது. மரணத்திற்கும், மர்ம சம்பவங்களுக்கும் காரணமானதே ஆட்டந்தான் என்பதை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. அடுத்தடுத்த சம்பவங்களின் துரத்தலாக கதை அமைந்திருப்பது, இந்நுாலை படிக்கும் ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது. திரைப்படத்தை மிஞ்சும் திகில் […]
Read more