வெல்வதற்கே வாழ்க்கை

வெல்வதற்கே வாழ்க்கை, கவிஞர் கவிதாசன், குமரன் பதிப்பகம், விலை 80ரூ. ‘எண்ணம் போல வாழ்வு’ என்பார்கள். வாழ்க்கையை வண்ணமயமாக்குவது எண்ணங்களே. அதன் அடிப்படையில் தன்னம்பிக்கை கட்டுரைகளை இந்த நூலில் கவிஞர் கவிதாசன் எழுதியுள்ளார். ‘தோற்றுப் போவது அவமானம் இல்லை. தோல்வியில் அவமானம் இல்லை. தோல்வியில் இருந்து கற்றுக்கொள்வதுதான் அனுபவம்’, ‘செவிகளில் தேன் தடவும் சொற்களை விட, இதயத்திற்கு இதம் சேர்க்கும் செயல்களே சிறந்தவை’ என்பன போன்ற கருத்துகளை நூல் முழுக்கக் காணலாம். நன்றி: தினத்தந்தி, 12/7/2017,

Read more