தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு

தமிழ்மொழியின் கட்டமைப்பு பண்பு, சு.சீனிவாசன், தமிழ்ப் பல்கலைக்கழகம், பக். 264, விலை 250ரூ.

தமிழ் மொழியின் கட்டமைப்பு – பண்பு உறவுகளை ஆய்வு செய்தல்: ஒரு தகவல் கோட்பாடு அணுகு முறை என்னும் முனைவர் பட்ட ஆய்வேடு, 17 ஆண்டுகளுக்கு முன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் வளர்ச்சித் துறையின் வெளியீட்டு நுாலாக வந்துள்ளது.

பேராசிரியர் ராம.சுந்தரம் நெறியாளராக இருந்து வழிகாட்டிஉள்ளார்.கணித அறிவியல் அடிப்படையில் தமிழ் மொழியை நுட்பமாகவும், கட்டமைப்பு நோக்கிலும் ஆய்வு செய்துள்ளார்.

தமிழின் எழுத்துகள், அதன் வரி வடிவங்கள், ஒலி வடிவங்கள், சொல் ஒலிக்கும் அளவீடுகள், சொற்றொடர் அமைப்பு செய்யுள் – யாப்பு, உரைநடை – பேச்சு ஆகிய எல்லாவற்றையும் தகவல் கட்டமைப்பு நோக்கில், கணக்கியல் அடிப்படையில் ஆய்வு செய்துள்ளார்.

திருக்குறள், நாலடியார், நளவெண்பா, மணிமேகலை வெண்பா ஆகியவற்றின் விரல் பதிவையும், நவீன இலக்கிய சுந்தர ராமசாமி, சமுத்திரம், தோப்பில் மீரான், வாசந்தி புதின நடைகளையும், விரல் பதிவையும் கணிதத்தின் மூலம் பதிவு செய்துள்ளார்.
இந்தியா டுடே, ஆனந்த விகடன் இதழ்வழி எழுத்தாளர்களின் நடையையும், வாக்கியங்களையும் ஆய்வு செய்து பட்டியல் இட்டுள்ளார்.

இயல் ஏழில் ஆங்கிலத் தமிழ்மொழி பெயர்ப்புகளை ஆய்ந்துள்ளார். சில இலக்கண வாய்பாடுகளை, அறிவியல் அடிப்படை நோக்கில் ஆய்கிறார். அறிவியல் நோக்கில் தமிழை ஆய்வு செய்பவருக்கு ஆதரவு காட்டும் நுால் இது!

– முனைவர் மா.கி.இரமணன்

நன்றி: தினமலர், 10/12/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *