தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு

தமிழ்த்தென்றலின் சமூக நோக்கு, முனைவர் பத்மாவதி விவேகானந்தன், என் வெள்ளிமயில், விலை 145ரூ.

தமிழ்த் தென்றல் என்ற உடனேயே நினைவிற்கு வருபவர் திரு.வி.கல்யாண சுந்தரனார். முதல் தலைப்பே நூலிற்கும் பெயராய் அமைந்துள்ளது. மொத்தம், ஏழு தலைப்புகளில் கட்டுரைகளாகவும், நூல் விமர்சனங்களாக, பதினாறு கட்டுரைகளும் விளக்கப்பெறுகின்றன.

திரு.வி.க.,வின் சிந்தனைகள், அவரது வாழ்வில் நிகழ்ந்த புரட்சிகள் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க., எந்த ஒரு மொழியையும் வெறுப்பவர் அல்லர்.

அவரே, ஆங்கிலம், வடமொழி, பாலி முதலிய மொழிகளை அறிந்திருந்தார் (பக். 26). தாய் மொழிப்புலமை பெற்ற பின் விருப்பமான வேறு மொழிகளை பயிலலாம் என்றார். அரவாணி பற்றிய விழிப்புணர்வு, கருத்துகள் விவரிக்க பெறுகிறது.

‘கடித இலக்கிய உத்தி’ என்ற கட்டுரையில் சமுதாய முன்னேற்றத்திற்கான கருத்தோடு கட்டுரை செல்கிறது. வெற்று உபதேசங்கள் வாழ்க்கை நியதியாகாது. ‘மனிதன் தவறு செய்யக் கூடாது’ என்பதை விட, தவறு செய்யாமல் வாழும் வாய்ப்பை, வசதியை, அரசு செய்ய வேண்டும் என்று தன் ஆசையை வெளியிடுகிறார்.

ஒரு நூல் படித்தவுடன் வாசகருக்கும், சமுதாயத்திற்கும் பயனுள்ள பல தகவல்களை தர வேண்டும் என்ற குறிக்கோளை இந்த நூல் நிறைவு
செய்திருக்கிறது.

–பேராசிரியர் ரா.நாராயணன்

நன்றி: தினமலர், 25/6/2017.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *