தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1)
தமிழ்நாடு திருத்தலங்கள் வழிகாட்டி (பாகம்-1), வடகரை செல்வராஜ்,ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக்: 1021, விலை ரூ.900.
ஆன்மிக சுற்றுலா செல்ல விரும்பும் பக்தர்களுக்குத் தேவையான குறிப்புகளை விளக்கமாகச் சொல்லும் நூல் இது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள முக்கியமான கோயில்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
திருக்கோயில்களில் காணப்படும் முக்கிய அம்சங்கள், கோபுரம், தல விருட்சம், திருக்குளம், தேர், ஆலயமணி, நந்தவனம், உள்வீதி, வெளிவீதி, மடப்பள்ளி, அபிஷேகம், அலங்காரம், பிரசாதம், பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்என்று ஒவ்வொன்றும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.
சிவபெருமான், விஷ்ணு, பிள்ளையார், முருகன், பிரம்மா, நடராஜர், கிருஷ்ணர் போன்ற தெய்வங்கள் பற்றியும், நாக பஞ்சமி, கிருஷ்ண ஜெயந்தி, துர்க்கா பூஜை, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் பற்றியும் ஆன்மிக செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாரிமுனை கச்சாலீஸ்வரர், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர், பாடி திருவலிதாயம், கொளத்தூர் சோமநாதீஸ்வரர் என 150- க்கும் மேலான திருக்கோயில்களின் பட்டியலை அளித்திருக்கிறார் ஆசிரியர்.
அதோடு, திருக்கோயில்களின் வரலாறு, கோயிலின் சிறப்பு, அமைந்திருக்கும் இடம், தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களையும் தெரிவித்து சிறந்த ஒரு வழிகாட்டி நூலாக இதை உருவாக்கியுள்ளார் இந்நூலாசிரியர்.
நன்றி: தினமணி,10/9/2018.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818