தமிழரைத் தேடி
தமிழரைத் தேடி, த.தங்கவேல், சமூக இயங்கியல் ஆய்வு மையம், பக்.326, விலை ரூ.250.
ஓர் இனத்தின் பண்பாடுகளை வரையறுக்க அவ்வினத்தின் மொழியை முன்னிறுத்துவது உலக வழக்கம். அவ்வகையில் தமிழர்களுக்கும் தமிழுக்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. பிற இனத்தின் உடன்பாடான பண்பாட்டுக் கூறுகளையும் தமிழினம் உள்வாங்கியது. அதேநேரத்தில் தமிழினத்தின் தனித்துவமான அடையாளங்கள் பேணிக்காக்கப்பட்டன. தமிழர்களின் பண்பாட்டில் புகுந்த பிற இனங்கள் குறித்த ஆய்வுக்கு முக்கியத்துவம் அளித்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
தமிழர்கள் யார், அவர்களின் பண்பாட்டு அடையாளங்கள் யாவை, அவர்களது தோற்றம், குடியேற்றங்கள் எங்கு எப்போது ஏற்பட்டன என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க முயன்றுள்ளது.
மத்திய தரைக் கடலோர வணிகக் குடிகள் தென்னிந்தியாவுக்குக் குடியேறி இங்குள்ள பூர்வகுடிகளிடம் இரண்டறக் கலந்து தமிழ்மொழி பரிணமித்தது. இக்குடிகள் மூன்று வெவ்வேறு அரசியல், பொருளாதாரக் காரணிகளுக்காகத் தமிழகத்தில் குடியேறினர். ஒவ்வொரு குடியேற்றக் கட்டத்திலும் தமிழ் மொழியும் குறிப்பிடத்தக்க மாறுதல்களை சந்தித்துள்ளது என்பதை வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து நிறுவ முற்பட்டுள்ளது இந்நூல்.
“சுமேரியர்களின் இந்தியக் குடியேற்றங்கள்’, என்கிற தலைப்பின் கீழ் விவரிக்கப்பட்டுள்ள கருத்துகள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் தோன்றிய முதல் மனிதக் கூட்டத்தின் வழி வந்தவர்களே இன்று உலகம் முழுவதும் பரவலாக வாழ்கின்ற மக்கள் கூட்டங்கள் என்கிற கருத்தை “மனித இனங்களின் தோற்றமும் பரவுதலும்’ என்ற தலைப்பில் மிகவும் விரிவாக இந்நூல் அலசுகிறது.
நன்றி: தினமணி, 11/4/22.
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033132_/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818