தி டாடாஸ்
தி டாடாஸ்: ஹவ் அ பேமிலி பில்ட் அ பிஸினஸ் அண்ட் அ நேஷன், கிரீஷ் குபேர்,ஹார்பெர்காலின்ஸ், விலை: ரூ.699
அந்நிய ஆதிக்கத்தின் கீழ் இந்தியா ஆட்பட்டிருந்த காலத்திலேயே இரும்பு உருக்காலை என்ற கனரகத் தொழிலைத் தொடங்கிய நிறுவனம் டாடா. ஜாம்ஷெட்பூர் என்ற புதியதொரு தொழில் நகரத்தையே உருவாக்கிய ஜாம்சேட்ஜி டாடாவின் கண்களிலிருந்து 150 ஆண்டுகளுக்கு முன்பு தெறித்த தொழில் முனைவு என்ற ஆர்வத் தீப்பொறி பற்றிப் பரவி, சாதாரண மக்களின் காரான ‘நானோ’வை அறிமுகப்படுத்திய ரத்தன் டாடா வரை டாடா குழுமத்தைச் சிறியதொரு நகரத்திலிருந்து உலகம் பரந்த பெருநிறுவனமாக உயர்த்தியிருந்தனர்.
இந்நூலை வாசிப்பதென்பது டாடாவின் வரலாற்றை வாசிப்பது மட்டுமல்ல; இந்தியக் கட்டுமானத்தை வாசிப்பதும்கூட. அந்நிய மேலாதிக்கம் தொடங்கி உலகமயமாக்கல் வரை பல்வேறுபட்ட பொருளாதாரச் சூழல்களில் எதிர்நீச்சல் அடித்து வென்ற ஒரு மாபெரும் தொழில் நிறுவனத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான வரலாற்றை, இந்தியாவின் முதல் தொழில் முனைவர்களின் குடும்பம் என்ற வகையில் டாடா குடும்பத்தின் தனித்தன்மையை அறிந்துகொள்ள உதவும் சிறப்பான நூல் இது.
நன்றி: தமிழ் இந்து, 13/4/19.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818