தென்னாட்டுச் சிற்பி ஜீவா
தென்னாட்டுச் சிற்பி ஜீவா, சங்கர் பதிப்பகம், விலை 90ரூ.
சிறு வயதிலிருந்தே மக்கள் நலனுக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் போராடுவதையே வாழ்க்கையாகக் கொண்டிருந்த ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல்.
அவர் வாலிப்திதிலேயே தீண்டாமையையும், சாதி அமைப்பையும் எதிர்த்து தீவிரமாகப் போராடினார். பெரியார் தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றார். அரசியலில் பங்கு பெற்ற காலத்தில் சிறைவாசம், காவல்துறையினர் தாக்குதல்கள், தலைமறைவு வாழ்க்கை என்பது அவரது வாழ்க்கையில் முக்கிய நிகழ்வுகளாக இருந்தன.
அவர் தனது லட்சியத்தை மக்களுக்கு கொண்டு செல்வதில் பன்முகத்தன்மை கொண்ட தலைவராக விளங்கினார். தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். கலை இலக்கியங்களில் விற்பன்னராக இருந்தார். உணர்ச்சி கொந்தளிக்கும் பிரச்சாரகராக விளங்கினார். புரட்சிகர கவிஞராகவும் இருந்தார். இந்திய கம்யுனிஸ்டு கட்சியின் ஏடான ஜனசக்தியின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
கம்யூனிஸ்டாக ஆகும் முன்பும் ஆன பிறகும் எளிய வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய ஜீவாவின் வாழ்க்கை வரலாற்றை இளைய தலைமுறையினரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதியுள்ளார் முனைவர் ப.பாலசுப்பிரமணியன்.
நன்றி: தினத்தந்தி, 30/3/2016.