தீர்க்க சுமங்கலி பவ!
தீர்க்க சுமங்கலி பவ!, ப்ரியா கல்யாணராமன், குமுதம் புது(த்)தகம், பக். 160, விலை 150ரூ.
பெண்களுக்கும் அம்மன்களுக்கும் உள்ள நெருக்கத்தை பக்தி என்ற ரீதியில் மட்டும் காட்டாமல், மகளுக்கும் தாய்க்குமான பாசம் என்ற ரீதியிலும் காட்சிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன்.
பெண்களுக்கு உரிய காலத்தில் திருமணம், குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம், நோய்களில் இருந்து விடுதலை, பில்லி சூனியம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு உள்ளிட்ட ஏராளமான பலன்களை அள்ளித்தரும் தெய்வங்களைப் பற்றியும் திருத்தலங்கள் பற்றியும் பக்திமணம் கமழ, குமுதத்தில் வாரந்தோறும் எழுதிவந்தது, இப்போது நூலாக வந்துள்ளது.
தம்பதியர் ஒரு நாளும் பிரியாமல் இருக்க வரம் தரும் அம்மனையும் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர அருள்புரியும் அம்மனையும் அதன் வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கும் விதம் சிறப்பு. ஒவ்வொரு கோயிலையும் புகைப்படங்களுடன் தந்திருப்பதால் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க அம்மனை நேரடியாக தரிசிக்கும் அனுபவம் கிட்டுகிறது.
-இரா. மணிகண்டன்.
நன்றி: குமுதம், 04/5/2016.