தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை
தேசிய கல்விக் கொள்கை 2016 – மகராஜாவின் புதிய ஆடை, தொகுப்பு தேனி சுந்தர், அறிவியல் வெளியீடு, விலை 40ரூ.
புதிய கல்விக் கொள்கை அவசியமா?
இந்திய அரசின் ‘தேசிய கல்விக் கொள்கை 2016’ பற்றிய தமிழ்நாட்டின் கல்வியாளர்களின் பார்வையை விளக்குகிறது இந்நூல். ‘விழுது’ – புதிய கல்விக் கொள்கைச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டிருக்கிறார் தேனி சுந்தர்.
கல்வியாளர்கள் முனைவர் ச.மாடசாமி, எஸ்.எஸ்.இராஜகோபாலான், பேரா. ஆர்.ராமானுஜம், பேரா.என்.மணி, பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் இந்தப் புத்தகத்தில் புதிய கல்விக் கொள்கையின் பல்வேறு அம்சங்களை விரிவாக அலசியிருக்கின்றனர்.
அத்துடன் புதிய கல்விக் கொள்கையின் அவசியத்தையும் கல்வியாளர்கள் கேள்விக்குள்ளாக்குகின்றனர். இந்தப் புதிய கல்விக் கொள்கை கல்வி முறையில் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகளையும் இந்நூலில் கல்வியாளர்கள் முன்வைத்திருக்கின்றனர்.
நன்றி: தி இந்து, 9/1/2018.