திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள்
திருப்புமுனையான திரைப்படப் பாடல்கள், ஜி.எஸ்.எஸ்.,, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160.
மொழிக்கு இசையில்லை. ஆனால் பாடலுக்கு மொழி அவசியம். கவிஞர்களின் ரசனையில் தோய்ந்து வரும் வார்த்தைகள் வரிகளாக கட்டமைக்கும் போது, மொழி புரிந்தால் மட்டுமே மனம் லயிக்கும். 32 முத்தான பாடல்களை, அவற்றின் வரிகளை படமாக்கப்பட்ட விதத்தை, ஒளிப்பதிவு கோணத்தை, இன்னும் சில கூடுதலான தகவல்களோடு சேர்த்து காவியமாக்கியுள்ளார் நுாலாசிரியர் ஜி.எஸ்.எஸ்.,
‘திருப்புமுனையான திரைப்பட பாடல்கள்’ புத்தகத்தில் ஒவ்வொரு பாடலுக்குமான பாடலாசிரியரின் தாக்கத்தையும் தெளிவுபடுத்தியது அருமை. தசாவதாரம் படத்தில், ‘கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’ என்ற பாடல், பாடலாசிரியர் வாலியின் குறும்பில் துவங்குகிறது.
திருவிளையாடல் படத்தில் வரும், ‘பாட்டும் நானே… பாவமும் நானே…’ என்ற பாடலின் காட்சிகளையும், வரிகளையும் விவரிக்கும் போது சபாஷ் சொல்ல வைக்கிறது. அந்த படத்தில் உள்ள சில பாடல்களையும், பாடிய பாடலாசிரியர்களையும் சேர்த்து கூடுதல் தகவல்களை பதிவு செய்து சுவை கூட்டியுள்ளார்.
இந்த வரிசையில், பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக் கூட்டம் அதிசயம்… ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே… என, 32 பாடல் காட்சி யமைப்புகளை சொல்லும் போது சுவாரசியம் பிறக்கிறது. புதிய திரைப்படம் பார்ப்பது போன்ற பிரமாண்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
– எம்.எம்.ஜெ.,
நன்றி: தினமலர், 1.8.21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818