தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள்
தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள், தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ.
கவிக்கோ பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட 100 கவிஞர்கள் எழுதிய 500 ஹைக்கூ கவிதைகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நூலின் தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானிய மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் உருவான ஹைக்கூ கவிதைகள், பின்னர் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை ஆய்வு நோக்கில் விரிவாகச் சொல்லி இருக்கிறார்.
அனைத்து ஹைக்கூ கவிதைகளும், கருத்தை அழகாகச் சொல்வதால், மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விடுகின்றன. கவிதையை எழுதியவர்களின் பெயருடன் அவர்களைத் தொடர்புகொள்ள வசதியாக அவர்களின் மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்து இருக்கும் புதிய முயற்சியைப் பாராட்டலாம்.
நன்றி: தினத்தந்தி, 31/10/21.
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818