உடல் அரசியல்
உடல் அரசியல், ஜெகாதா, மீனாட்சி புத்தக நிலையம், பக்.232, விலை ரூ.200.
உடல் மொழி பற்றி கேள்விப்பட்டிருப்போம். பேசும்போதும், பேசுவதற்கு மாற்றாகவும் உடல் மொழி உதவுகிறது. இந்த “உடல் அரசியல்’ நூல் கூட ஒருவிதத்தில் உடலின் பேச்சை – உடலின் மொழியை – நாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தூண்டுகிறது.
நான் என்று ஒருவர் தன்னை நினைத்துக் கொள்வது அவருடைய சிந்தனை, மனோபாவம் ஆகியவை மட்டுமல்ல, இந்த உடலும் சேர்த்துத்தான் என்பதால் உடலைப் பற்றி தெரியாத விவரங்களை இந்நூல் சொல்லித் தருகிறது. நமது உடலில் உள்ள உறுப்புகள்-அவை செயல்படும்விதம், ஹார்மோன்கள்- அவற்றின் பணிகள், சிறுநீரகத்தின் செயல்கள், இனப்பெருக்கம் என மனித உடலின் இயக்கத்தையும், அந்த இயக்கம் சீராக நடைபெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்நூல் விளக்குகிறது.
6 மணி நேரம் தூங்குவதா? 8 மணி நேரம் தூங்குவதா என்று தூங்கும் நேரத்தை வரையறுப்பதை விட உடலின் தேவைக்கு ஏற்ப தூங்குவதே நல்லது என்கிறார் நூலாசிரியர். உடம்பில் சுரப்புநீர்கள் சரியாகச் சுரக்காவிட்டால் என்ன செய்வது? உடல் எடையைக் குறைப்பதால் மனித உடலுக்கு ஏற்படும் நன்மைகள் எவை? உடல் நலனுக்காக செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் எவை? பாலுறவு விஷயத்தில் சரியான கருத்துகள் எவை? கண்களை, சிறுநீரகங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும்? உடலின் கழிவுத் தொழிற்சாலையான சிறுநீரகம் சரியாகச் செயல்பட நாம் என்ன செய்ய வேண்டும்? என்பன போன்ற பல உடல் நலம் சார்ந்த விஷயங்களை மிகத் தெளிவாக இந்நூல் விளக்குகிறது.
நன்றி: தினமணி, 3/2/2020
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030342.html
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818