உறவுகள்
உறவுகள், வி.ஜி. சந்தோஷம், சந்தனம்மாள் பதிப்பகம், பக். 287, விலை 150ரூ.
‘வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால் பெரும் சாதனைகள் புரிவதற்காக அதனைச் செலவிட வேண்டும்’ என்கிறார் மகாத்மா காந்தி. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பார்கள். உலகிலுள்ள 700 கோடி மக்களும் கூடி வாழ்வது எத்தனை பெரிய சிறப்பு!
மகிழ்ச்சி, அன்பு, ஒற்றுமை, உறவு, உழைப்பு, உயர்வு போன்ற கொள்கைகளே உலக மக்களை ஒருங்கிணைக்கும் பாலங்களாக அமைய முடியும். எனவே, ஒற்றுமை என்பது அனைத்து உயிரினங்களிலும் காணப்படுகின்றது. அவை பெரும்பாலும் குழுக்களாகவே இயங்குகின்றன. அப்படி இருக்கையில் மனிதர்கள் ஒருவருக்கொருவர் உறவுப் பாலத்தை மிகச்சரியான முறையில் அமைத்துக் கொள்ள வேண்டியது அவயிம் என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.
தாய், தந்தையுடனான உறவு, பாசப்பிணைப்பால் உண்டான உறவுகள், இணக்கம், விட்டுக்கொடுக்கும் தன்மை, சமாதானம், ஒருங்கிணைப்பு, குடும்ப மற்றும் சமுதாய உறவுகள், தொழில் அல்லது தொழில் புரிபவர்களின் இடையிலான உறவுகளின் அவசியம், மதங்களின் வாயிலாக கற்றுக் கொள்ளப்படும் சங்கதிகள், ஆன்மிகம், இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைபுப், மெய்ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் புரிதல்கள் என நிறைய விஷயங்கள் உதாரணங்களுடன் விளக்கப்பட்டிருப்பது சிறப்பு.
அறிஞர் பெருமக்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் போன்ற அனைவருக்குமே ஓர் உடன்பாடு அல்லது புரிதல் தேவையாய் இருக்கிறது. சிறிய விஷயங்களிலும் உறவுகளின் தேவை எத்தனை அவசியம் என்பதை சிறு சிறு தலைப்புகள் இட்டு சொல்லியிருப்பது அருமை.
நன்றி: தினமணி, 11/4/2016.