வடமொழி வரலாறு
வடமொழி வரலாறு, பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ.
“வடமொழி (சமஸ்கிருதம்) ஆதிக்கத்தில் இருந்து தமிழை மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் தேவநேயப் பாவாணர். “தேவபாஷை” என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட வடமொழி, இன்று பேச்சு மொழியாக இல்லை.
கோவில்களில் அர்ச்சனை செய்வதற்குப் பயன்படும் மொழியாகவே இருந்து வருகிறது. “திராவிடத்திற்கு தாயாக மட்டுமின்றி, ஆரியத்திற்கு (வடமொழி) மூலமாகவும் தமிழ் விளங்குகிறது” என்று இந்த நூலில் ஆணித்தரமாக விளக்குகிறார் பாவாணர்.
நன்றி: தினத்தந்தி, 1/3/2017.