வன்காரி மாத்தாய்

வன்காரி மாத்தாய், பேராசிரியர் ச.வின்சென்ட், எதிர் வெளியீடு, பக்.318, விலை 275ரூ.

ஸ்டீபன் ஹாக்கிங், ப்ராய்ட் வரிசையில் கென்ய  நாட்டு சுற்றுச்சூழல் போராளி வான்காரி மாத்தாய் குறித்து தன் அடுத்த மொழி பெயர்ப்பு நுாலை தந்துள்ளார் பேராசிரியர் ச.வின்சென்ட்.

‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்’ என இப்போது குரல் எழும் நிலையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன், ‘ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்’ என குரல் கொடுத்து அதற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் கென்யாவை சேர்ந்த வான்காரி மாத்தாய்.

அதுமட்டுமின்றி பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தவர். பசுமை பகுதி இயக்கத்தை துவக்கி, உலகளவில் மரம் வளர்க்க வேண்டும் என குரல் கொடுத்தவர்.
அவரது சேவையை பாராட்டி, 2004ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
‘அன்பவுண்ட் ஏ மெமியர்’ என தன் வரலாறை அவர், 2006ல் வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டிருந்ததை அழகு தமிழில் அனைவரும் புரியும் வகையில் படிக்க, அலுப்பு தட்டாத வகையில் நுாலாசிரியர் தந்திருப்பது அருமை.

அவரது பிறப்பு, படிப்பு, மரம் நடுதலில் இறங்கியது, குடும்ப வாழ்க்கை, சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்திற்காக போராடியது என, 12 தலைப்புகளில் தந்திருக்கிறார். கால்
நடைகளின் இனப்பெருக்கம் குறித்த ஆய்வு மேற்கொண்ட வான்காரி மாத்தாய், சுற்றுச்சூழல் பாதிப்பு அனைத்து பிரச்னைக்கும் காரணம்; சுற்றுச்சூழல் பாதிப்புக்கு மரங்கள் அழிக்கப்படுவதே என, 1971ல் தெரிந்து கொண்டார்.

இதற்காக பசுமை பகுதி இயக்கத்தை துவக்கி கென்யா மட்டுமின்றி, உலக நாடுகளில் மரம் வளர்ப்பை ஊக்குவித்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.
அரசியல் களத்தில் இறங்கி வெற்றி பெற்று, நோபல் பரிசு அவரை தேடி வந்தது வரையிலான வரலாறு, அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

மேஷ்பா      

நன்றி: தினமலர், 19/11/2017

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *