வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு
வரலாற்று உண்மைகள் தமிழ்மண் தமிழர் தமிழ் வரலாறு, தமிழ் புகழேந்தி, பத்மா பதிப்பகம், விலை 350ரூ.
தமிழ்நாட்டின் வரலாற்றை ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார், தொல்லியல் கல்வெட்டு ஆய்வாளர் தமிழ் புகழேந்தி.
தமிழ் உணர்வுடன் இந்த நூலை அவர் எழுதியிருப்பது பாராட்டுக்கு உரியது. உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழி தமிழ்தான் என்று உறுதிபடக் கூறுகிறார்.
“உலகில் முதன் முதலில் மனிதன் தோன்றியது தென்னிந்தியாவில்தான்” என்று சர்ஜான்ஸ் இவான்ஸ் என்ற மேல்நாட்டு அறிஞர் கூறியுள்ளதை எடுத்துக்காட்டுகிறார். “குமரிக்கண்டம் (லெமூரியா) கடலில் அமிழ்ந்தபோது, அதில் வசித்த மக்கள் எட்டுத் திசைகளிலும் சென்று உலகின் பல பாகங்களிலும் குடியேறி வசிக்கலாயினர்” என்று குறிப்பிடுகிறார். தமிழர் வரலாற்றை அறிய நல்லதொரு புத்தகம்.
நன்றி: தினத்தந்தி, 28/12/2016.