வருவான் வடிவேலன்
வருவான் வடிவேலன், தி.செல்லப்பா, தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், விலைரூ.160.
அழகன் முருகன் தமிழுக்கு சொந்தமானவர். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரம் சரவணபவ. இதனுடன் மந்திரச் சொற்களை சேர்க்கும் போது சக்தி அதிகமாகும். குருவின் மூலம் உபதேசம் பெற்று, நியமநிஷ்டையுடன் இருந்தால் மட்டுமே மந்திரம் சொல்ல வேண்டும்.
கந்தசஷ்டி கவசம் எழுதிய தேவராய சுவாமிகள் மந்திரச் சொற்களை சேர்த்து கட்டமைத்தார். இந்த வரிகளைச் சொன்னால் நியமத்துடன் மந்திரம் சொன்னதாக அர்த்தம். சரவணன், முருகன், கந்தன் பெருமைகளை தொகுத்து, ‘தினமலர் ஆன்மிகமலர்’ இதழில் வெளிவந்தது, ‘வருவான் வடிவேலன்’ தொடர். வாசகர்களால் விரும்பி படிக்கப்பட்ட நிலையில் புத்தகமாக வெளியாகி உள்ளது.
கந்த புராணத்தில் அரக்கர்களின் வரலாறு, மாயா தோன்றியது முதல் லட்சோப லட்சம் அரக்கர்கள் தோன்றி பலம் பெற்று தேவர்களை துன்புறுத்தியது, முருகனின் வருகை, வருகைக்கு முன் திருவிளையாடல் என, கந்தனின் பெருமைகளை சொல்கிறது.
– எம்.எம்.ஜெ.,
நன்றி: தினமலர்,8/8/21
இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d/
இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609
இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818