வழிகாட்டும் வள்ளுவம்
வழிகாட்டும் வள்ளுவம், வானதி பதிப்பகம், விலை 170ரூ.
திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் புதுப்புது தகவல்களைக் கூறும் அரிய நூல் இது. பேராசிரியர் இரா. மோகன், அவர் மனைவி பேராசிரியர் நிர்மலா மோகன் இருவரும் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளனர்.
திருக்குறளுக்கு அறிஞர் – பெருமக்கள் எழுதிய உரைகளை ஆராய்ந்து, நாமக்கல் கவிஞர் சில குறள் பாக்களுக்கு எழுதியுள்ள நுட்பமான உரையை சுட்டிக்காட்டுகிறார்கள். திருவள்ளுவருக்கும், சீன அறிஞர் கன்பூசியசுக்கும் (கி.மு.551 – கி.மு.479) உள்ள ஒற்றுமைகள் பற்றியும் எடுத்துக் கூறுகிறார்கள்.
சுருக்கமாகக் கூறினால், திருவள்ளுவர் பற்றிய கலைக்களஞ்சியம் இந்த நூல். திருக்குறள் பற்றி முழுவதும் அறிய விரும்புவோருக்கும், ஆராய்ச்சியாளர்களும் பெரிதும் பயன்படும்.
நன்றி: தினத்தந்தி, 27/4/2016.